புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம் ஆரணியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:
தமிழக அரசியலுக்கு ரஜினிகாந்த் வருவது உறுதியாகிவிட்டது ரஜினிகாந்த் இராமன் என்றால் சகோதரர் இலட்சுமணனாக இருந்து புதியநீதிக்கட்சி இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.
தென்னிந்திய நதிகளை இணைத்தாலே தமிழக விவசாயம் செழிக்கும் எனவும் 90 % இலவசங்கள் வழங்குவதை மாநில அரசு 3 ஆண்டு நிறுத்தினாலே தமிழக நதிகளை இணைத்துவிட முடியும்.
தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை அண்ணா எம்.ஜி.ஆர். போன்று பொற்கால ஆட்சி ரஜினிகாந்த் வழங்குவார்.
கர்நாடகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா விரைவில் தமிழகத்திற்கு காவிரிநீரை திறந்துவிடுவார் என புதிய நீதிக்கட்சி நம்பிக்கை தெரிவிப்பதாக ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.