கர்நாடகாவில் பாஜக ஆட்சி புதுச்சேரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.

கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைஉருவாகியுள்ளது. இந்த சூழலில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து அம்மாநில ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுச்சேரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸும், ஜேடிஎஸ் கட்சியும் இணைந்து பெரும்பான்மையை காட்டியபோதிலும் ஆளுநர் வஜுபாய் வாலா, 104 இடங்களை பெற்ற பாஜகவையே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பின்பேரில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் இந்த செயலை கண்டித்து அம்மாநில ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுச்சேரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.