கேரளா மற்றும் தமிழகத்தின் தென்பகுதிகளில் இன்றுதென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக தெரிவித்தார். இதனால் வரும் மே 31ஆம் தேதி வரை மீனவர்கள் குமரி கடல், கேரள, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.