பணி நிரந்தரம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடஉள்ளனர்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பணி நிரந்தரம், கால முறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஓய்வூதியம் குறைந்த பட்சமாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்லேவேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓய்வுபெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிக்கொடை குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், பணியாளர்களுக்கு பணிப் பதிவேடு மற்றும் பணிவிதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பணியிழந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் குடும்பத்தாருக்கு அரசுப் பணியும், இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று, டாஸ்மாக் கடையடைப்பு மற்றும் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.