திருப்பரங்குன்றத்தில் இன்று ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் உறசவம் இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. ஆண்டுதோறும் ஆனி மாதம் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு, கோயிலுக்கு உள்ள திருவாச்சி மண்டபத்தில் விசேஷ ஊஞ்சல் அமைக்கப்பட்டு, அதில் தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுடன் எழுந்தருள்வார். பொன் ஊஞ்சல் பாடல்களுடன், தீபாராதனையும் நடைபெறும்.

விழாவின் 10ம் நாளான வரும் 27ம் தேதி முப்பழ பூஜை நடைபெறும் அன்று மதியம் உச்சி கால வேளையில் அனைத்து சாமி சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்