சென்னை ஆர்.கே.நகர் தொகுதியை விட கடலூர் மழை வெள்ள பாதிப்பை முக்கியத்துவம் குறைந்ததாக ஜெயலலிதா கருதியதன் காரணமாகவே அங்கு 28 அமைச்சர்களை பயன்படுத்தி தற்போது கடலூரில் வெறும் 5 அமைச்சர்களை நியமித்துள்ளதாக விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை வெள்ளியங்கிரி பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் ஒரு வார கால தியானத்திற்கு பின்னர் சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,  

சென்னை மற்றும் கடலூரில் மழை  வெள்ளபாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை விரைவில் பார்வையிட உள்ளோம். சென்னை ஆர்.கே. நகர் இடை தேர்தலில் 28 அமைச்சர்களை பயன்படுத்திய ஜெயலலிதா அதனை விட கடலூர் முக்கியத்துவம் குறைந்ததாக எண்ணிய காரணத்தால் வெறும் 5 அமைச்சர்களை பணியமர்த்தியுள்ளார்.  5 அமைச்சர்களுக்கு பதில் 10 அமைச்சர்களை நியமித்திருக்கலாம். 100 ரூ. 100 ரூ. திருடினா திருடன், 1000 கோடி திருடினா தலைவரா? விஜயகாந்த் ஆவேசம்விஜயகாந்த் ஆவேசமாக கூ றினார்.   

நாட்டில் சகிப்பு தன்மை குறைந்து விட்டது. அரசு அதிகாரிகளுக்கு முதலில் சகிப்பு தன்மை வரவேண்டும்.  மக்கள் நல கூட்டணியில் தேமுதிகவை அழைத்ததற்கு நன்றி. ஈஷா யோக மையத்தில் மேற்கொண்ட ஒரு வார யோக பயிற்சியில் உடல் மற்றும் மன ரீதியாக புத்துனர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுக்கப்பட்ட காணொளி  இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.   

COURTESY & SOURCE :  www.nakkheeran.in

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending