ஹாங்காங்கில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை கர்மான் கவுர் தண்டி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஹாங்காங்கில், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி, சீனாவின் ஜியா–ஜிங் லு மோதினர். அபாரமாக ஆடிய கர்மான் கவுர் 6–1, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார். இது, ஐ.டி.எப்., ஒற்றையர் பிரிவில் இவரது முதல் பட்டம். ஏற்கனவே இவர், இரட்டையரில் 3 பட்டம் வென்றுள்ளார்.