இந்தியா ஆடிய 100வது சர்வதேச டி-20 போட்டி: சில சுவாரஸ்யங்கள்!

இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக நேற்று விளையாடிய போட்டியின் மூலம், 100வது சர்வதேச ‘டி–20’ போட்டியில் விளையாடிய 7வது அணி என்ற பெருமையைப் பெற்றது.

இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக நேற்று விளையாடிய போட்டியின் மூலம், 100வது சர்வதேச ‘டி–20’ போட்டியில் விளையாடிய 7வது அணி என்ற பெருமையைப் பெற்றது.

முன்னதாக, 128 போட்டிகளில் விளையாடி பாகிஸ்தான் முதலிடத்திலும், நியூசிலாந்து (111), இலங்கை (108), தென் ஆப்ரிக்கா (103), ஆஸ்திரேலியா (100), இங்கிலாந்து (100) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. நேற்று இந்திய அணி விளையாடிய டி20 போட்டியின் மூலம் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

இந்திய அணி தனது முதலாவது சர்வதேச டி–20 போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கடந்த 2006 ஆம் ஆண்டு ஜோகனஸ்பர்க்கில் விளையாடியது. அப்போது இந்திய லெவன் அணியில் இடம் பெற்றிருந்த தோனி, ரெய்னா ஆகியோர், நேற்று இந்திய அணி பங்கேற்ற 100வது டி–20 போட்டியிலும் இடம் பெற்று விளையாடினர். அது போல், பாகிஸ்தானின் அப்ரிதி, சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், இலங்கையின் உபுல் தரங்கா ஆகியோரும், தங்கள் அணி விளையாடிய முதல் மற்றும் 100வது சர்வதேச டி–20 போட்டியில் விளையாடியுள்ளனர்.