தலைமை நீதிபதியை விமர்சித்த புகாரில் தங்கதமிழ்செல்வன் விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசு நோட்டீஸ்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வழக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட் மற்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சனம் செய்ததாக, தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி, அவருக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

”எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை ஜூன் 14-ம் தேதி வழங்கியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான தங்க தமிழ்செல்வன் தங்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதியை விமர்சித்து பல பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் முன்வைத்து வருகிறார்.

குறிப்பாக தலைமை நீதிபதி பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், அரசுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்குவதற்காக தலைமை நீதிபதி லஞ்சம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் சென்னையில் மன்றம் இருப்பதாகவும் அதன் வெளிப்பாடாகவே தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே அரசிற்கு தீர்ப்பு விவரங்கள் தெரிந்துவிட்டது. அரசியலுக்கு ஏற்ப நீதிமன்றம் ஆடுவதாகவும் தங்க தமிழ்செல்வன் பேசி இருந்தார்..