சென்னை: பேருந்துகளில் நடத்துனர்கள் ஏன் தேவைப் படுகிறார்கள் தெரியுமா? இதற்கான ரகசியத்தை பாமக., நிறுவுனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த வாரம் தமிழகம் முழுவதும் சில வழித்தடங்களில் நடத்துனர் இல்லாத பேருந்து இயக்கத்தை அரசு தொடங்கி வைத்துள்ளது. இதன்படி, பாயிண்ட் டூ பாயிண்ட்டாக பேருந்துகள் இயக்கப்படும். ஓட்டுநர் மட்டுமே கொண்ட பேருந்து என்பதால், வழியில் பயணச் சீட்டு வாங்க இயலாது. இதனை தனது டிவிட்டர் பதிவில் கிண்டல் செய்திருக்கிறார் ராமதாஸ். வண்டி பாதிவழியில் முரண்டு பிடித்தால் இறங்கித் தள்ள ஆள் வேண்டுமே என்று கேட்டு, நடத்துனரின் பணி தள்ளிவிடுவதுதான் என்று பளிசெனக் கூறியுள்ளார்.
அவரது டிவிட்டர் கருத்து…தமிழகம் முழுவதும் 28 வழித்தடங்களில் நடத்துனர் இல்லாத பேருந்துகள் அறிமுகம்: செய்தி – அனைத்தும் புதிய பேருந்துகளாம். அய்யோ பாவம் ஓட்டுனர்கள். பாதி வழியில் நின்றால் கூட இறங்கி தள்ள ஆள் இருக்க மாட்டார்களே!
தமிழகம் முழுவதும் 28 வழித்தடங்களில் நடத்துனர் இல்லாத பேருந்துகள் அறிமுகம்: செய்தி – அனைத்தும் புதிய பேருந்துகளாம். அய்யோ பாவம் ஓட்டுனர்கள். பாதி வழியில் நின்றால் கூட இறங்கி தள்ள ஆள் இருக்க மாட்டார்களே!
— Dr S RAMADOSS (@drramadoss) July 8, 2018