மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகியுள்ளது!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே, டோம்பிவிலி, கல்யாண், உல்லாஸ்நகர் மற்றும் பிவண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் பதறிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் கூறுகையில், “மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது. இது சுமார் 2.8 ரிக்டர் அளவில் பதிவானது. இதனால் சேதம் ஏற்படவில்லை” என தெரிவித்தனர்.