அதிரடி தள்ளுபடிகளுடன் இன்று தொடங்கும் ஃபிளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் விற்பனை’

அமேசான் பிரைம் விற்பனைக்கு போட்டியாக ஃபிளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டேஸ்’ என்ற ஆஃபர்கள் நிறைந்த விற்பனையை தொடங்க உள்ளது

இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள ஃபிளிப்கார்ட் இந்த சிறப்பு விற்பனை, வரும் 19 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது. சாம்சங், கூகுள், விவோ ஸ்மார்ட் போன்கள் அதிரடி விலையில் விற்பனைக்கு வர உள்ளன

குறிப்பாக, 42,999 ரூபாய்க்கு கூகுள் பிக்சல் 2 போன் (128ஜிபி) விற்பனைக்கு வருகிறது. மேலும், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3, ஐபோன் எக்ஸ், ஐபாட் ஆறாவது ஜெனரேஷன், ஏசர் ப்ரிடேட்டர் கேமிங் லாப்டாப் ஆகியவையும் தள்ளுபடி விற்பனையில் இடம்பெற்றுள்ளது

ஸ்மார்ட் போன்களுக்கு எக்சேன்ஜ் ஆஃபரும், பை-பேக் உத்தரவாதமும் அளிக்கப்பட உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி க்ரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 10% தள்ளுபடி உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் கூகுள் பிக்சல் 2 போன், 42,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. இதன் உண்மையான விலை விற்பனை விலை 70,000 ரூபாய்

எக்சேன்ஜ் ஆப்பரில் 3000 ரூபாயும், கேஷ்பாக் ஆஃபரில் 8,000 ரூபாயும் திரும்ப அளிக்க உள்ளது. விவோ வி7 (64ஜிபி) போன், 19,990 ரூபாய்க்கும் (ரூ.21,990), ஹானர் 9ஐ 14,999 ரூபாய்க்கும் (ரூ19,999), பட்ஜெட் பானசோனிக் பி65 போன் 3,999 ரூபாய்க்கும் (ரூ.6490) விற்பனைக்கு வர உள்ளது.

ஐபோன்களை பொறுத்தவரையில், ஐபோன் எக்ஸ் போனுக்கு ஆஃபர் உள்ளது என ஃபிள்ப்கார்ட் அறிவித்திருந்தது. எனினும், சரியான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை

ஃபிளிப்க்கார்ட் பிக் டேஸ் விற்பனையில், 7,999 ரூபாய் மதிப்புள்ள இன்பினிக்ஸ் ஹாட் 6 ப்ரோ போனை அறிமுகப்படுத்த உள்ளது. இன்ப்பினிக்ஸ் போன் விற்பனை ஜூலை 17 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்க உள்ளது. பழைய போன்களை எக்சேன்ஜ் ஆப்பரில் மாற்ற குறைந்தது 500 ரூபாய் தள்ளுபடி பெறலாம் என ப்ளிக்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.12 மாதங்கள் இஎம்ஐ லிமிட்டுடன், ஸ்மார்ட் போன் விற்பனைக்கு நோ காஸ்ட் இஎம்ஐ வசதி பாஜாஜ் ஃபின்சர்வ் அளித்துள்ளது.

கூடுதலாக, ஃபிளிப்கார்ட் விற்பனையின் போது, ரஷ் ஹார் சேல்ஸ் தினம் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைப்பெற உள்ளது. ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கும், ப்ரெஷ் டீல்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. ஏசர் ப்ரிடேட்டர் கேமிங் லாப்டாப் 63,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பவர்-பேங்க், வீட்டு உபயோக பொருட்கள், ஆகியவற்றுக்கு 70% வரை தள்ளுபடி அளிக்க உள்ளது.