“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது” என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில், மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி வந்தால் மட்டுமே மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் தமிழக அரசு காமராஜரின் பெயரை சொல்லிக்கொண்டு வருகிறது. அவருடைய பெயரை சொல்ல தற்போது இருக்கிற ஆட்சியாளர்களுக்கு எந்த அருகதையும், தகுதியும் கிடையாது. என்றும், முட்டை, பருப்பு, மணல் பிரச்சினை, மின்துறை ஊழல், பொதுப்பணித் துறை ஊழல், கல்வித்துறை ஊழல், துணைவேந்தர்கள் நியமன ஊழல் உள்ளிட்டவை சம்பந்தமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக கவர்னரை நேரில் சந்தித்து 24 துறைகளின் ஊழலை புள்ளிவிவரங்களுடன் 208 பக்க அறிக்கையாக கொடுத்து உடனடியாக ஆய்வு நடத்துங்கள், விசாரணை நடத்துங்கள் என்று கோரிக்கை விடுத்தேன்.
கவர்னர் என்னிடம் நிச்சயமாக இந்த அறிக்கையில் உள்ள அத்தனையும் முழுமையாகப் படித்து அதில் உண்மை இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை தொடருவேன் என உறுதியளித்தார் என்று கூறினார்.