தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வைகோ மனுவுக்கு வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு

05 July19 Sterlite plantதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து, அந்த நிறுவனத்தை மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது, தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், வழக்கில் தன்னையும் பதில் மனுதாரராக இணைத்துக் கொள்ளக் கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு வேதாந்தா நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.