09 July23 Mettur dam - 2026மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், அந்த அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 118 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து ஏற்கெனவே வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் முழு கொள்ளளவை எட்டியதால் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending