October 23, 2021, 1:50 am
More

    ARTICLE - SECTIONS

    வெளியானது 1-ம் முதல் பிளஸ்-2 வரை காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள்

    08 July27 exam time table - 11-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு விடுமுறை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு கால அட்டவணையும், 10-ஆம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான தேர்வு கால அட்டவணையில், காலாண்டு தேர்வு- செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையும், * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையும் * இறுதித் தேர்வு- ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையும் நடத்தப்படும்.

    9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான தேர்வு கால அட்டவணையில், காலாண்டு தேர்வு- செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையும், * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையும், * இறுதித் தேர்வு- ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை (9-ம் வகுப்பு மட்டும்) நடக்க உள்ளது

    செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையில் காலாண்டு விடுமுறை காலமாகவும், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை காலமாகவும், ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை கோடை விடுமுறை காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,137FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,581FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-