Homeசற்றுமுன்பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு

பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு

21 July30 Bavani sagar dam - Dhinasari Tamilபவானி சாகர் அணையில் கீழ்பவானி திட்டக்கால்வாயின் மதகுகள் வழியாகவும் மேட்டூர் அணையில் புள்ளம்பாடி, மேட்டுக்கால்வாய்களிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மேட்டூர் அணையில் புள்ளம்பாடி, மேட்டுக்கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42 ஆயிரத்து 736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார். இதேபோல, ஈரோடு பவானி சாகர் அணையின் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மாண கால்வாய்களில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 63ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர்மகசூல் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,097FansLike
380FollowersFollow
76FollowersFollow
74FollowersFollow
3,964FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பொன்னியின் செல்வன்-3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் ..

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

Latest News : Read Now...