வங்கதேச இளம் கிரிக்கெட் வீரர் மீது மனைவி வரதட்சணை புகார்

Published:

14 Aug27 Cricketer - 2026

வங்க தேச கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மொசாடெக் ஹுசைன். இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 13-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ளார்.

22 வயதாகும் இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது 1 மில்லியன் டாகா (12,003 அமெரிக்க டாலர்) கேட்டு சித்ரவதை செய்வதாகவும், உட்சக்கட்டமாக கடந்த 15-ந்தேதி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் வக்கீல் மூலம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மொசாடெக் ஹுசைன் ஏதும் கூற மறுத்துவிட்ட நிலையில், அவரது சகோதரர் மொசாபெர் ஹுசைன் மூன் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இதுகுறித்து மொசாபெர் ஹுசைன் மூன் கூறுகையில் ‘‘அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்தே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. எனது சகோதரர் ஆகஸ்ட் 15-ந்தேதியே விவாகரத்து லெட்டர் அனுப்பிவிட்டார். ஆனால், அவரது மனைவி அதிக பணம் கேட்டார். பணம் கிடைக்காததால், பொய்யான தகவலை பரவ விட்டு, தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்’’ என்றார்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

மொசாடெக் ஹுசைன் வங்காள தேச அணிக்காக இரண்டு டெஸ்ட், 21 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img