சென்னை: கருத்தைத் தெரிவிக்க இடம், பொருள், ஏவல் எல்லாம் இருக்கிறது என்று மாணவி சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தபோது, அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை நொச்சிக்குப்பத்தில் இன்று காலை, செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவரிடம், தமிழிசை, சோபியா விவகாரம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், சோபியாவின் செயல் விளம்பரம் தேடும் நோக்கமுடையது என விமர்சித்தார்.
கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக விமானத்திற்குள் சென்று ஒழிக என்று கோஷமிடுவதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.