பிரபல நடிகையின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்த மதகுரு கைது

பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் பெற்றோருக்கு தேவேந்திர குஜ்ஜார் என்பவர் தான் ஒரு மதகுரு என்று அறிமுகம் செய்து கொண்ட 2 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானார்.

அவருக்கு யோகா குரு பாபா ராம்தேவை நன்கு தெரியும் என்று கூறியுள்ளார். அதனால் நடிகையின் பெற்றோருக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் ஷில்பா ஷெட்டியின் பெற்றோரிடம் ஆயுர்வேத மருந்து நிறுவனம் தொடங்க உதவி செய்வதாகக் கூறி ரூ. 2 கோடி வாங்கி மோசடி செய்தாக கூறப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து, ஷில்பா ஷெட்டியின் பெற்றோர்காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தேவேந்திர குஜ்ஜாரை தேடி வந்தனர்.

தேவேந்திர குஜ்ஜார் தன் சொந்த ஊரான உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ராணிகலன் பகுதியில் பதுங்கி இருப்பதாக மும்பை காவல்துறையினருக்குத் ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர், உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் தேவேந்திர குஜ்ஜாரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .