முகனூலில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளைத்துரை

தமிழகத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என அனைவராலும் அழைக்கப்படும் வெள்ளைத்துரை முகனூலில் நேற்று 23-11-2015 அன்று இணைந்துள்ளார் .

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்றால் உடனடியாக அனைவரின் நினைவுக்கும் வருபவர் வெள்ளைத்துரைதான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது .

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளைத்துரை தமிழக காவல்துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றியமைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அவர் தற்போது இராமநாதபுரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

காவல்துறையில் அவர் பணியாற்றும் பகுதிகளில் பொதுமக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு குற்றங்களைத் தடுக்க குற்றவாளிகள்மீது எடுக்கும் அதிரடியான நடவடிக்கைகளால் ஊடகங்கள் வாயிலாக திடீர் திடீர் என தோன்றக் கூடியவர்.

அரசாங்கத் துறைகளில் பணியாற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகள் சமூக ஊடகங்களில் இணைந்து அதில் பதிவிடும் பதிவுகளைக் கண்டு நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது.

இந்த நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை முகனூலில் இணைந்தது வரவேற்புக்குரியது.