தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் 3 நாள் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிடுள்ளது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலைத் தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று அந்த குழு ஆய்வு செய்யும் தேதிகளை கூறியுள்ளது.
அதில் இன்று முதல் 3 நாட்களுக்கு மேகாலய உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.