திருச்சி: மனைவி தன்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை என்ற ஆத்திரத்தில், கடைகள் மற்றும் வீடுகள் கார் ஆகியவற்றுக்கு தீ வைத்த இளைஞரை போலிசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி தனலட்சுமி மணப்பாறை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துப் பேசாமல் ஒதுங்கிச் சென்றுள்ளனர்.
மனைவி தன்னிடம் பேசாமல் முகம் முறித்துச் சென்றதால் வெறுப்படைந்த ஜார்ஜ்,நள்ளிரவில் போதையில் மணப்பாறை அழகர்சாமி தெருவில் உள்ள ஜெயக்குமார் என்பவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு தீ வைத்துள்ளார்.
அப்படியும் ஆத்திரம் அடங்காமல், மஸ்தான் தெருவில் உள்ள வெங்காய கடை, நாடக நடிகர் சங்க அலுவல கொட்டகை ஆகியவற்றுக்கு தீ வைத்துள்ளார்.
மேலும் பூங்கா தெருவில் உள்ள இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைக்கு தீ வைத்ததோடு, அங்கிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளார்.
போதையில் ஜார்ஜ் ஆடிய வெறியாட்டம் சிசிடிவி பதிவுகளாக இருந்ததால், அவற்றை ஆய்வு செய்த போலிசார், ஜார்ஜை கைது செய்தனர்.