குடும்ப பிரச்னை  காரணமாக சங்கர் ஐஏஎஸ்அகடாமியின் நிறுவனர் சங்கர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப் படுகிறது.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் ஐஏஎஸ் பயிற்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாதாகக் கூறப்படுகிறது. இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சங்கர் மறைவுக்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்தார். அவரது இரங்கல் செய்தியில்…

சென்னையில் செயல்பட்டு வரும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் இன்று காலை அகால மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சங்கர் தமது கடுமையான உழைப்பால் முன்னேறியவர். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்த அவர், அது நனவாகாத நிலையில் இ.ஆ.ப. பயிற்சி நிறுவனம் தொடங்கி நூற்றுக்கணக்கானவர்களை குடிமைப்பணி அதிகாரிகளாக உருவாக்கினார். ஏழை மாணவர்கள் பலருக்கு கட்டணமின்றி பயிற்சி அளித்தவர். போட்டித் தேர்வுகளின் நுணுக்கங்களை மாணவர்களுக்கு விளக்கி வெற்றிக்கு வழி வகுத்தவர்.
சமூக நீதியில் அக்கறை கொண்ட அவர், அதற்காக வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பல்வேறு தளங்களில் குரல் கொடுத்துள்ளார். அவரது மறைவு போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சங்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.- என்று குறிப்பிட்டிருந்தார்.
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...