
நடிகர் கமல் மனக் கணக்கில் உள்ளார் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறினார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை, முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான நவ்ஜோத் சிங் சித்து தமிழகத்தையும் தமிழக உணவு, தமிழ் மொழியையும் இழிவாகப் பேசியுள்ளார்.
மேலும் தமிழ் மொழியைக் காட்டிலும், பாகிஸ்தான் மொழி சிறந்தது என்று கூறியிருக்கிறார். இப்படி தமிழை இழிவாகப் பேசிய சித்துவுக்கு எதிராக ஒரு கட்சி தலைவர் கூட ஏதிர்ப்பு தெரிவிக்க வில்லை. தமிழை போற்றுகிற எந்த தமிழ் அமைப்பும் ஏதிர்க்கவில்லை!
இதேநேரம், பாஜக.,வில் இருப்பவர்கள் யாராவது சொல்லியிருந்தால், அது செய்தித்தாள்களிலும் டிவியிலும் முழுக்க முழுக்க பாஜக.வுக்கு எதிரானதாகவே மாறியிருக்கும். ஏன் இப்படி இருக்கிறார்கள்?
எனவே தமிழையும் தமிழ் உணவு, கலாசாரத்தையும் இழிவாகப் பேசிய சித்து பதவி விலக வேண்டும் , கட்சியை விட்டு சித்துவை நீக்க வேண்டும். இதைக் கண்டித்து நாளை சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கமல் வாழ்க்கையில் முக்கால்வாசி அவருடைய கஜானாவை சேமித்து வைத்து விட்டு இப்பொழுது அரசு கஜனா காலியாகிறது என தெரிவிக்கிறார். இவ்வளவு நாட்கள் எங்கு இருந்தார்? ஏதோ மன கணக்கில் கமல் உள்ளார்!
உள்ளாட்சித் தேர்தல் வந்தால் எங்கள் கொடிகள் பறக்கும்! ஆனால் தேர்தல் வருமா? விஜய்யின் திரைப்படத்திற்கு சர்கார் என பெயர் எவ்வளவு முக்கியமாக வைக்கிறார்கள்..? என்றால் சர்காரில் இருக்கும் எங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் எனக் கூறினார் தமிழிசை சௌந்தர்ராஜன்.