November 28, 2021, 7:16 am
More

  சுசி கணேசனின் மறுப்பே அவரைக் காட்டிக் கொடுக்கிறது!: லீனா மணிமேகலை

  இதை அடுத்து லீனா மணிமேகலை தன் மீது சுமத்திய பாலியல் புகார் குறித்து இயக்குனர் சுசிகணேசன் விளக்கம் அளித்தார். அவர் தனது முகநூலில் அளித்துள்ள விளக்கத்தில்...

  susiganesan manimegalai - 1

  இயக்குனர் சுசி கணேசன் ஒரு முறை, ஒரு பேட்டி முடிந்த பின்னர், தன்னை தன் வீட்டின் அருகில் இறக்கி விடுகிறேன் என்று சொல்லி, காருக்குள் ஏற்றிக் கொண்டு, தவறாக நடக்கப் பார்த்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், கவிஞர், இயக்குனருமான லீனா மணிமேகலை.

  இதை அடுத்து லீனா மணிமேகலை தன் மீது சுமத்திய பாலியல் புகார் குறித்து இயக்குனர் சுசிகணேசன் விளக்கம் அளித்தார். அவர் தனது முகநூலில் அளித்துள்ள விளக்கத்தில்…

  லீனா மணிமேகலை- உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும் பன்றி , வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள். இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நீருபித்துவிட்டீர்கள்….உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ??? அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலியே , ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும்

  புதுமைப் பெண்ணான நீங்கள் , கத்தியை அந்த அப்பாவி( ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர். அத்தைனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிடுவதற்கு முன்- என்னை கொச்சைப் படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன். இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை, உன்னைப் போன்ற .metoo-இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் ” சமுதாய வைரஸ்களை” களை களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை.

  Social media நண்பர்களுக்கு-தயவு செய்து metoo-இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ர புத்தி கொண்டவர்களை அடையாளம்கண்டு தவிறுங்கள். லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள்- உதவி இயக்குனர்/பாடல் ஆசிரியர். இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில், சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்பமுடியாமல், ஏனோ என்மீது வன்மைத்தை துப்பியிருக்கிறார். கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்ப, வேதனைபோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்” என கூறியுள்ளார்

  இதற்கு பதிலளித்துள்ள லீனா மணிமேகல, சுசி கணேசனின் மறுப்பே அவரைக் காட்டிக் கொடுக்கிறது. என் சொந்த வாழ்க்கை என் மனதிற்குகந்த மிக மகிழ்ச்சியான வாழ்க்கை. அதன் வெற்றி தோல்வியை அவர் எப்படி தீர்மானிக்க முடியும். கவிஞராக என் இடமென்ன என்று என் படைப்புகளும் இலக்கிய வாசக உலகமும் சொல்லும். சினிமாவில், அவர் எடுத்த படங்களை விட மிக நல்ல படங்களையே எடுத்திருக்கிறேன். என் படங்களில் பொறுக்கிகள் ஹீரோக்கள் அல்ல. மனசாட்சியை விற்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

  சுசிகணேசனை சந்திக்கும்போதே நான் கவிஞர்,இயக்குனர். வாய்ப்பு கேட்கும் தேவையில் நான் இல்லை. அவரைப் பற்றிய பதிவு போட்ட பிறகு நிறைய பத்திரிகையாளர்களும் பெண்களும் அவரைக் குறித்த இன்னும் அதிபயங்கர தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள். அவர்களுக்கு தங்கள் அனுபவங்களைப் பகிரங்கப் படுத்தும் தைரியம் வாய்க்கட்டும்… – என்று கூறியுள்ளார். தொடர்ந்து இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, உண்மையை ஊருக்குச் சொல்வேன் என்று கூறியுள்ளார் லீனா மணிமேகலை.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,746FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-