சபரிமலை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்க்கும் விதத்தில், அறப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது இந்து மக்கள் கட்சி. அக்கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இது குறித்து நம்மிடம் தெரிவித்தவை…
புனிதமான சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலின் புனிதம் கெடுக்க கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர் நேற்றைய தினம் சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் மீது தடியடிப் பிரயோகம் நடைபெற்றுள்ளது சபரி மலை மீது நம்பிக்கை இல்லாத பக்தி இல்லாத பெண்களை 18 படிகள் ஏற வைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது
சபரிமலையின் புனிதம் காக்க அயராது உழைத்து வரும் மன்னர் குடும்பம் திரு ராகுல் ஈஸ்வர் அவர்களின் குடும்பம் இவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் சபரிமலையின் பாரம்பரிய நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் இதை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றி விட வேண்டும் ஹிந்து தர்மத்தை அழித்துவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு ஆட்சி அதிகாரத்தைக் கையிலே வைத்திருக்கின்ற கேரள பினராய் விஜயன் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் நாங்கள் தீவிரம் காட்டுகிறோம் என்று சொல்லுகின்ற இவர்கள் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்களா
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்கின்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்களா முல்லைப் பெரியாறு விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்களா வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு இந்த தீர்ப்பை இவ்வளவு அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன கிறிஸ்தவ பெண்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பெண்களை மது அருந்துகின்ற பெண்களை ஆபாசமாக பலரோடு வாழ்க்கை நடத்துகின்ற பெண்களை சபரிமலையில் பதினெட்டு படிகள் எப்படியாவது ஏற்றி வைத்து விட வேண்டும் என்று பினராய் விஜயன் துடிக்கின்ற காரணம் என்ன
கேரள மாநிலமே கொதித்தெழுந்து போராடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் தலைவர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டங்களை அறவழியில் நடத்தி வருகிறார்கள் அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கொடும் தாக்குதலை கேரள போலீசார் மூலமாக சபரிமலை பக்தர்களை ஓடுக்கி வருகிறார்கள்
சபரிமலை போர்க்களமாக மாறி இருக்கிறது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் வேதனை ஏற்படுத்தியுள்ளது எனவே சபரிமலையின் புனிதம் காத்திட மத்திய அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் கேரள மாநிலத்தில் அராஜக ஆட்சி நடத்துகின்ற பினரயி விஜயன் அரசை டிஸ்மிஸ் செய்ய கோரியும் சபரிமலையில் பக்தர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்தும்
இந்து மக்கள் கட்சியின் சார்பில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் ஐயப்ப பக்தர்கள் உடன் இணைந்து கையில் காவி கொடிகளோடு சத்யாகிரக அறப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்
மத்திய அரசும் இது விஷயத்தில் பாராமுகமாக இருப்பது எங்களுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது மத்திய மோடி அரசாங்கம் இது விஷயத்தில் உடனடியாக தலையிட்டு ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் ஆனால் மோடி அரசாங்கம் பினராய் விஜயன் கேட்டுக்கொண்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சமாளிக்க கூடுதலாக காவலர்களை அனுப்பி வைக்கின்றோம் என்று தகவல் அனுப்பி இருக்கிறார்கள்
இது எங்களுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது இதுவரையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே இது விஷயத்தில் கருத்து தெரிவிக்காமல் இருப்பது செயல்படாமல் இருப்பது மோடி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கவர்னர் சதாசிவம் அவர்கள் இது விஷயத்தில் செயல்படாமல் இருப்பது ஐயப்ப பக்தர்கள் அரசியல் அனாதைகள் ஆகி விட்டார்கள் என்பதை உணர்த்துகிறது
எனவே தமிழகத்திலும் இருக்கக்கூடிய பக்தர்களோடு இணைந்து மன்னரின் வேண்டுகோளை ஏற்று ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இந்த சத்யாகிரக போராட்டம் நடைபெறும் சத்யாகிரக போராட்டம் முழுமையாக அறவழியில் வன்முறை துளியும் இல்லாமல் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் மூலமாக நடத்தப்படும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் இருக்கின்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கேரள எல்லை வரை சென்று முற்றுகைப் போராட்டத்தை நடத்துவார்கள்
மற்ற பகுதியில் இருக்கக்கூடிய இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் ஐயப்ப பக்தர்கள் உடன் இணைந்து ரயில் மறியல் பஸ் மறியல் விமான மறியல் இப்படி அனைத்து விதமான மறியல் போராட்டங்களையும் சத்யா கிரகமாக நடத்தி தங்களைத் தாங்களே கைது நடவடிக்கைக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள் காவல் துறையோடு முழுமையான ஒத்துழைப்பை கொடுக்க தயாராக இருக்கின்றோம் எந்த வகையிலும் இதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராதபடி பார்த்துக் கொள்வோம்
ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக நடைபெறக்கூடிய இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு ஹிந்துவும் ஐயப்ப பக்தரும் இதிலே பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் அனைத்து கட்சியினரும் சபரிமலைக்கு மாலை அணிந்தவர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் திமுகவில் இருக்கிறார்கள் காங்கிரஸ் இருக்கிறார்கள்
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நேரடியாக களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறது அதேபோல தமிழகத்திலும் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்
இந்த அறப்போராட்டம் சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் மாதப்பிறப்பன்று நடை திறந்து ஐந்தாம் நாள் நடைபெறும் எனவே வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடக்கக்கூடிய நடை அடைப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது
எனவே வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இந்த நான்கு நாட்களும் சபரிமலையின் புனிதம் காப்பதற்காக ஐயப்ப பக்தர்களும் ஹிந்து இயக்கத் தொண்டர்களும் சபரிமலையில் அறவழிப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள் அவர்களுக்கு ஆதரவாக தான் இந்த சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற இருக்கிறது
இந்து மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் அனைத்து அங்கத்தினர்களும் அனைத்து ஆதரவாளர்களும் இந்தப் போராட்டத்திலே கட்டாயம் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும் கைதாகவும் தயாராக இருக்க வேண்டும் அடக்குமுறை நம் மீது பட்டால் சகிப்புத்தன்மையோடு இருக்க ஜனநாயக வழிமுறைகளில் நாம் இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டும் இந்து மக்கள் கட்சியின் உடைய அனைத்து நிர்வாகிகளும் இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி உங்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றேன் – என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.