தரமான குடிநீரை வீடுகளில் விநியோகிக்க தமிழக அரசு முழு முயற்சி செய்ய வேண்டும் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டரில், தண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தரமான குடிநீரை வீடுகளில் அரசே வினியோகிக்க முழுமுயற்சி எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதனை உணர்ந்து உடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கேன் தண்ணீர் வேண்டாம், அரசின் குழாய் தண்ணீரே போதும், நம்பி குடிக்கலாம், அவ்வளவு சுத்தமாக குழாயில் வரும் என மக்கள் சொல்லும் காலம் வரவேண்டும் என்று பதிவிட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜன், இது அரசின் கடமை அல்லவா? என்றும் குறிப்பிட்டுள்ளார்.