சேலம் ரயில் கொள்ளையர்கள்… ரூ.5.78 கோடியை செலவழிச்சிட்டாய்ங்களாம்..!

சேலம்-சென்னை ரயிலில் கொள்ளையடித்த பணத்தை, பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பே செலவு செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

சேலம்-சென்னை ரயிலில் கொள்ளையடித்த பணத்தை, பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பே செலவு செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பணமதிப்புநீக்க அறிவிப்புக்கு முன்னரே ரூ.5.78 கோடியை கொள்ளையர்கள் செலவு செய்துள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். தங்கமாக அல்லது சொத்துகளாக இந்தப்பணத்தை செலவு செய்து  வாங்கியுள்ளனரா என சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஓடும் ரயிலில் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள், அந்த பணத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே செலவு செய்துவிட்டதாக விசாரணையில் கூறியுள்ளனர்.

கடந்த 2016 ஆகஸ்ட் 8 இல் சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில், மேற்கூரையை துளையிட்டு ரூ.5.78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளை வழக்கில் 2 ஆண்டு தேடலுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களில் 5 பேரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? கொள்ளையடித்த பணத்தை என்ன செய்தார்கள்? பங்கு பிரித்து சொத்துகள் வாங்கியுள்ளார்களா? கொள்ளை நடந்த 3 மாதங்களிலேயே பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலானதால் பணத்தை மறைத்து வைத்திருக்கிறார்களா? என விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், கொள்ளையடித்த பணத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே பங்கு பிரித்து செலவழித்து விட்டதாக கொள்ளையர்கள் கூறியதாகத் தகவல் வெளியானது.