rain - 2026

வரும் 29ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசைக் காற்று வலுப்பெற்று வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 29ஆம் தேதி பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அது அறிவித்துள்ளது.

வானிலை நிலவரம் தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு:

கிழக்கு திசைக் காற்று வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக, வரும் நாட்களில் அந்தமான் – நிக்கோபர் தீவுகளில் மழை பெய்யும்! வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும்.

அதே காலகட்டத்தில் கேரளா, லட்சத்தீவு பகுதிகளிலும் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending