இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் மிக சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களை கெளரவபடுத்தும் விதத்தில் உயரிய விருதுகளில் ஒன்றான குடியரசு தலைவர் விருது பலருக்கு 
வழங்கபட்டு வருகிறது.
 
இந்த ஆண்டு நடைபெறும் இந்திய குடியரசு தினத்தையொட்டி 
தமிழக காவல் துறையில் மிக சிறப்பாக பணியாற்றி வரும் பலர் குடியரசு தலைவர் விருதுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
வேலூர்  மாவட்டத்தில்  பிறந்து வளர்ந்த வீரராகவன் அவர்கள் யோகா,   கராத்தே, பாடி பில்டிங், ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டு சிறந்த பயிற்சி பெற்றவர்.கராத்தே, பாடி பில்டிங், ஆகியவற்றில் மிக சிறந்து விளங்கியமைக்காக 1984ம் அவர் மிஸ்டர் தமிழ்நாடு எனும் பட்டதை பெற்றவர்.  
 
காவல்துறைக்கு வரும் முன்பே கடந்த (1981 ம் ஆண்டு) மறைந்த முன்னால் தமிழக  முதலமைச்சர் எம். ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தமிழக காவல் துறையில் பணியாற்றிய பெண் காவலர்களுக்கு கராத்தே, யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளித்த பெருமை இவரையே சாரும்.
 
1987ம்  வருடம் தமிழக  காவல் துறையில் வேலூர்  மாவட்டத்தில்  நேரடியாக உதவி ஆய்வாளராக பயிற்சி பெற்று  கோவையில் உதவி ஆய்வாளராக சேர்ந்து  சென்னை, திருவண்ணாமலை,வேலூர்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  சிறப்பாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று வந்தார். கடந்த 2007ம்  வருடம் தமிழக காவல் துறையில் மிக சிறப்பாக பணியாற்றியமைக்காக அவருக்கு முதலமைச்சர் விருதும் வழங்கப் பட்டது.
 
வீரராகவன் அவர்கள் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும்  நிலையில் கடந்த ஆண்டு (2015) சிறப்பாக பணியாற்றியமைக்காக சிறந்த மெச்சத்தகுந்த ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.
ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending