மத்திய அமைச்சர் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை கோரி தமிழக காவல்துறையில் புகார் !

Published:

 
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மீது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியமைக்காக நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
கோவையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இரு சக்கர வாகன பேரணியை அக்கட்சி இன்று நடத்தியது. இதில் பேரணியை துவக்கி வைத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தனர்.அப்போது இவர்களுடன் சென்ற பெரும்பான்மையானோர் ஹெல்மெட் அணியமால் பயணித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலில் உள்ள நிலையில், சட்டத்தை செயல்படுத்த வேண்டிய மத்திய அமைச்சரே அதை மீறலாமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளதோடு,
 
இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பெரும்பான்மையானோர் ஹெல்மெட் அணியாமல் பயணித்தனர். கட்டாய ஹெல்மெட் சட்டத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அமைச்சரே, பொறுப்புணர்வு இல்லாமல் நடந்து கொண்டுள்ளார்.
 
இதை பார்க்கும் மக்கள் ஹெல்மெட் அணியாமல் தான் வாகனத்தை இயக்குவார்கள்.
 
மோட்டார் வாகன சட்டம் 192ன் படி இது தண்டனைக்குரிய குற்றம். எனவே சட்டத்தை மதிக்காமல் செயல்பட்ட அமைச்சர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நீதிக்கட்சித் தலைவர் பன்னீர் செல்வம் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Related articles

Recent articles

spot_img