புது தில்லி:
2016-17ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜட்டை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும் புதிய ரயில்களுக்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை.
ரயில் பயணிகள் எதிர்பார்த்த அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. சரக்கு கட்டண உயர்வு இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், பிரதமரின் பொருளாதார தொலைநோக்குப் பார்வை அடிப்படையில் ரயில்வே பட்ஜெட் உருவாக்கப்பட்டதாக அமைச்சர் சுரேஷ் பிரபு தனது உரையில் கூறினார்.
ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், மக்களவை பிற்பகல் 2.15 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.