ஃபேஸ்புக்குடன் போட்டி போடும் நோக்கில் கடந்த 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது கூகுள் ப்ளஸ் சேவை. தொடக்கத்தில் வரவேற்பு இருந்தாலும் பின்னர் வெகுவாகக் குறைந்து போனது. மேலும், பாதுகாப்பு விஷயங்களிலும் பல சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டேயிருந்தது. அதைத் தொடர்ந்து ப்ளஸ் சேவையை நிறுத்தப்போவதாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது கூகுள். அதன்படி இன்று முதல் ப்ளஸ் சேவை நிரந்தரமாக முடிவுக்கு வருகிறது. இன்றிலிருந்து கணக்குகள் அனைத்தையும் நிரந்தரமாக அழிக்கும் வேலையைக் கூகுள் தொடங்கவிருக்கிறது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari