October 23, 2021, 8:52 pm
More

  ARTICLE - SECTIONS

  2019 – யாருக்கு, ஏன் வாக்களிக்கவேண்டும் – 2

  2

  Modi - 1

  அமெரிக்கா 9/11க்குப் பிறகு இஸ்லாமியத் தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் இலக்காக நாமே ஏன் இருக்கவேண்டும்? பாகிஸ்தான் போன்ற தீவிரவாத நாட்டுக்கு அருகிலேயே இந்தியா எனும் இந்துப் பெரும்பான்மை நாடு இருக்கிறதே… இஸ்லாமியத் தீவிரவாதிகள் அனைவரும் தமது புனிதப் போரின் இலக்காக இந்தியாவை ஆக்கிக் கொண்டால் நமக்கு சுமை குறையுமே என்று திட்டமிட்டு அயலுறவுக் கொள்கையில் கணிசமான மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

  அந்தத் திட்டத்தின் நீட்சியாகத்தான் பாஜக எதிர்ப்பு – நரேந்திர மோதி எதிர்ப்பு என்பது மெள்ள இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பதாக அடுத்தகட்டத்துக்கு நகரத் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே குஜராத் (மீடியா) கலவரத்தில் நரேந்திர மோதிக்கு வில்லன் பிம்பத்தைக் கட்டமைப்பதில் அவர்கள் பெரு வெற்றியும் பெற்றிருந்தார்கள்.

  இந்து சக்திகளுக்கும் அதே அமெரிக்க உதவிகள் கிடைக்கவும் செய்கின்றன. இந்தியாவில் இந்துத்துவம் வளர்ந்தால்தானே இஸ்லாமியர்கள் அதைக் குறிவைத்துத் தாக்க முடியும். அப்படியாக காங்கிரஸ் மூலம் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளை வளர்க்கும் அதே அமெரிக்க சக்திகள் பாஜக மூலம் இந்து அணிதிரளலை முன்னெடுத்துவருகிறார்கள். சதுரங்கத்தின் இருபுறமும் அமெரிக்காவே உட்கார்ந்து ஆடுகிறது. நகர்த்தப்படும் காய்களாக நம் தலைவர்களும் நாமும் இருக்கிறோம்.

  சென்ற தேர்தலில் காங்கிரஸுக்கு ’மோதி எதிர்ப்பு’ ஆலோசனை சொன்ன அமெரிக்கா வேறொரு ஆலோசனையும் வழங்கியிருக்கிறது. 1970கள் தொடங்கி சோனியா மூலம் மேற்கத்திய, கிறிஸ்தவ சக்திகள் இந்தியாவின் அனைத்து தளங்களிலும் ஊடுருவும் வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டநிலையில் இப்போது காங்கிரஸ் பி டீமகளை மாநிலவாரியாக உருவாக்கி பலப்படுத்தும் பணியை இந்த ஐந்தாண்டுகாலத்தில் முன்னெடுக்கச் சொல்லித் தந்திருக்கிறது. ஒரே இடத்தில் ஒரே ஆளாகப் படைகளைக் குவித்துக் கொண்டு தாக்குவதைவிட எதிரியைச் சுற்றிவளைத்து பல பக்கங்களில் இருந்து தாக்குவது கூடுதல் பலன் தரும் என்ற வியூகமே அது.

  மேற்குவங்கத்தில் திரிணமூல், டெல்லியில் ஆம் ஆத்மி, தமிழகத்தில் திராவிர முன்னேற்றக் கழகம்-நாம் தமிழர்-மய்யம், கர்நாடகாவில் தேவகவுடாவின் கட்சி என பல மாநிலங்களில் சோனியாவின் மறைவுக்குப் பிறகும் இந்து- இந்திய எதிர்ப்புப் பணிகள் தடையின்றி நடக்கவேண்டும் என்ற நோக்கில் பி டீம்கள் உருவாக்கப்பட்டுவிட்டிருக்கின்றன. கேரளாவின் கம்யூனிஸ்ட்கள், உத்தரபிரதேசத்தின் யாதவ்-மாயாவதி கூட்டணி இவையும்கூட இந்து விரோதத்தில் காங்கிரஸ் பி டீம் போன்றுதான் செயல்பட்டுவருகின்றன.

  வட கிழக்கு, காஷ்மீர் போன்ற பகுதிகளில் தேசியவாதத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்பது ஒருபோதும் நம்ப முடியாத ஒன்றே. ஏனென்றால் அங்கு பிரிவினை உணர்வை எந்த நொடியிலும் தூண்டிவிடமுடியும். காங்கிரஸ் இல்லா பாரதத்தை கணிசமான அளவுக்கு உருவாக்கிவிட்டிருப்பதாக பாஜக சந்தோஷப்படலாம். ஆனால், கலாசார பெருமிதமும் தேசிய உணர்வும் மிகுந்த பாரதமாக அது ஆக இன்னும் கடுமையாகப் போராடவேண்டியிருக்கும்.

  இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கான எதிர்ப்பு என்பது ஊடகங்களில் இருக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் இல்லை.  அந்த நம்பிக்கையில்தான் மாதத்துக்கு 6000 என்ற காங்கிரஸின் பிரம்மாஸ்திரத்துக்குக்கூட பாஜக சிறிதும் கலங்காமல் உழைத்து முன்னேறும் இந்தியா என்ற இலக்கை அடிப்படையாக வைத்து நியாயமான சலுகைகளை மட்டுமே (விவசாயிகளுக்கு ஓய்வூதியம்) வழங்க முன்வந்துள்ளது.

  ஆளுங்கட்சியான பாஜக மீது மக்கள் மத்தியில் எந்தப் பெரிய அதிருப்தியும் இல்லை என்பது உண்மைதான். ஆனால், காங்கிரஸ் பி டீம்களின் செல்வாக்கு எப்படி இருக்கும் என்பதுதான்  இந்தத் தேர்தலின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும். ஒருவேளை காங்கிரஸ் மற்றும் அதன் பி டீம்களிடையே வாக்குகள் பிரிந்துபோவதால் பாஜக மிக எளிதில் 300 இடங்களுக்கு மேல் தனியாகவே வென்றுவிடவும் வாய்ப்பு உண்டு. அல்லது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் போல் பாஜக வெற்றிக்கோட்டுக்கு வெகு அருகில் வந்து முட்டிக்கொண்டு நின்றுவிடுவதுபோலவும் ஆகலாம்.

  காங்கிரஸும் அதன் பி டீம்களும் இந்தத் தேர்தலில் தம்மால் தனியாக ஆட்சி அமைக்கவே முடியாது என்பதை நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே இலக்கு பாஜகவை தனிப் பெரும்பான்மை பெறவிடாமல் தடுக்கவேண்டும் என்பதுதான். பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவிட்டாலும் அதனுடைய கூட்டணிக் கட்சிகள் உதவியுடன் ஆட்சி அமைக்க முடியும்தான். ஆனால், அது பாஜகவின் ஆட்சியாக இருக்காது. ஏனென்றால், காங்கிரஸ் அளவுக்கு பாஜகவால் தன் கூட்டணிக் கட்சிகளை தேச வளர்ச்சி சார்ந்த தன் திட்டங்களுக்கு ஆதரவு தர வைக்க முடிவதில்லை.

  (தொடரும்)

  *

   

   

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,137FansLike
  368FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,580FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-