election_chennai

சென்னை :

சென்னை மாவட்டத்தில் 3771 வாக்குச்சாவடிகளுக்கு 9,784 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4841 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 256ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.

அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

இது குறித்து சென்னை மாநகராட்சியின் தேர்தல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாவட்டத்தில் மே 16ந் தேதி வாக்குப்பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மே 2ந் தேதி முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை முதல்சுற்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று இரண்டாம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3771 வாக்குச்சாவடிக்கும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்டதேர்தல் அலுவலர்/ஆணையாளர் டாக்டர்.பி.சந்தரமோகன், தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் (பொது), தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (09.05.2016) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 9784ம், கட்டுப்பாட்டு கருவிகள் 4841ம், ஒப்புகைச் சீட்டு 256ம், வாக்குச்சாவடி வாரியாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. அண்ணா நகர் தொகுதியில் வாக்களிப்பவர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் ஒப்புகைச் சீட்டு வழங்கும் கருவிகள் முன்னோடியாக பயன்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு இயயதிரங்களில் வேட்பாளரின் புகைப்படம் மற்றும் சின்னம் பொறித்த ஒட்டு வில்லைகள் ஒட்டும் பணி விரைவில் நடைபெறும். வாக்குப்பதிவிற்கு முதல்நாள் வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து தளவாட பொருட்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்படும்.

நாளை 10ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை மாவட்டத்தில் 10 இலட்சம் பேர் ஒரே நேரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் வகையில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பத்திரிகை, தொலைக்காட்சி அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இயநிகழ்ச்சியில் கலயதுகொண்டு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

2ம் கட்டமாக குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யும் பணி நிகழ்வில் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் (பொது), கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending