தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா’ வைரஸ் காய்ச்சல் கேரளாவையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து கேராளா செல்லும் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பான் அடிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று ரயில் வரும் பயணிகளுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று சோதன செய்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.