மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) நடத்தும் ஜவுளிக் கண்காட்சி இன்று முதல் தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கண்காட்சியை தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த் தொடங்கி வைக்கிறார். அத் துறையின் இயக்குநர் எம்.கருணாகரன், மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கண்காட்சி காலை 10 முதல் இரவு 8 மணி நடைபெறும். பொதுமக்கள் பிற்பகல் 3 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியைப் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.