காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத்திவரதரை தரிசிக்க, பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர் 10 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 200 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் 1200 மீட்டர் தொலைவுக்கு தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
நேற்று வரை 25 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர், இன்று மட்டும் மாலை வரை 1.7 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.