காஞ்சிபுத்தில் 40 வருடங்களுக்கு ஒருமுறை காட்சி கொடுக்கும் அத்திவரதரை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறையை தமிழக அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுத்தில் 40 வருடங்களுக்கு ஒருமுறை அத்திவரதர் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 1ம் தேதி முதல் அத்திவரதர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அத்திவரதருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அஞ்சல் உறையை நேற்று வெளியிட்டார்.
யுவி பிரின்டிங் செய்யப்பட்ட முதல் ஆயிரம் அஞ்சல் உரைகள் 50 ரூபாய் விலையிலும், அதற்கு பின் அச்சடிக்கப்படும் ஒரு லட்சம் அஞ்சல் உரை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
காஞ்சிபுரம் கோயிலில் வெளியே புனித கங்கை நீர் விற்பனை செய்யப்படுகிறது. 250 மி.லி கங்கை புனித நீர் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.