மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேற்கிந்திய தீவுகள் உடனான சுற்றுப்பயணம் துவங்குகிறது. இந்த சுற்றப்பயணத்திற்கு இந்திய அணியில் டோனி இடம்பெறுவாரா என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், நேற்றைய தினம் டோனியின் இரண்டு மாத விடுப்பு குறித்த தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மேற்கிந்திய சுற்றப்பயணத்திற்கான அணியினை BCCI வெளியிட்டுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான அணி: விராட் கோலி, ரோஹித் சர்மா, சிகர் தவான், KL ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், கேதர் ஜாதவ், மொகமது ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சாய்னி

டெஸ்ட் போட்டிக்கான அணி: விராட் கோலி, ரஹானே, மயங்க் அகர்வால், ராகுல், புஜாரா, ஹனுமான் விஹாரி, ரோகித் ஷர்மா, ரிஷாப் பன்ட், விரத்திமன் சாஹா, அஷ்வின், ரவிச்சந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இசாந்த் சர்மா, மொகமது ஷமி, ஜாஸ்பிரிட் பூம்ரா, உமேஷ் யாதவ்.

டி20 போட்டிக்கான அணி: விராட் கோலி, ரோகித் ஷர்மா, சிகர் தவான், ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குர்ணல் பாண்டையா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹர், நவ்தீப் சயினி.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...