மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவை எம்பியாக இன்று பதவியேற்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள தமிழக தலைவர்களின் சிலைகளுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின் வைகோ மீண்டும் எம்பியாக நாடாளுமன்றத்துக்குள் செல்கிறார். இதையொட்டி, மக்களவை நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா சிலையின் பாதம் பணிந்து வைகோ வணங்கினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை மற்றும் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கும் வைகோ புகழ் வணக்கம் செலுத்தினார்.