murugadas

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜயின் 65வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் அப்படத்திலிருந்து விலகினார். அதன்பின் விஜய் படத்தை நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், முருகதாஸ் அடுத்து ஒரு அனிமேஷன் படத்தை இயக்கவுள்ளார். இதற்காக சில ஹாலிவுட் படங்களுக்கு அனிமேஷன் செய்யும் வெளிநாட்டு கம்பெனிகளுடன் அவர் ஒப்பந்தம் போட்டுள்ளார். இப்படத்திற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக ஒரு குரங்கு கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான படப்பிடிப்பை முருகதாஸ் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அஜித், சூர்யா, விஜய், ரஜினி, அமீர்கான் என முன்னணி ஹீரோக்களை இயக்கிய முருகதாஸ் தற்போது குரங்கை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending