vishal

நடிகர் விஷால் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நிற்க வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவரின் அரசியல் ஆசை நின்று போனது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போது விஷாலுக்கு மீண்டும் அரசியல்வாதி ஆகும் ஆசை வந்துள்ளதாம். எனவே, ஏதேனும் ஒரு போட்டியில் போட்டியிட அவர் விரும்புவதாக தெரிகிறது. எனவே, எந்த தொகுதியில் தனக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என நண்பர்களிடம் அவர் ஆலோசனை செய்து வருகிறாராம்.

பாஜக அவரை இயக்குவதாக செய்திகள் உலா வரும் வேளையில், உதயநிதி அல்லது ஸ்டாலின் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குகளை பிரிக்க விஷால் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending