samai pidi kozuukatai - 2026

சாமை பிடிகொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
சாமை – ஒரு கப்,
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன்,
நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
பச்சை மிளகாய், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

சாமையைக் களைந்து ஒரு பங்கு சாமைக்கு இரண்டரை பங்கு என்கிற அளவில் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவிடவும். வெந்த சாமையை ஆறவிடவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, பச்சை மிளகாயைச் சேர்த்துப் புரட்டவும். பிறகு வாணலியைக் கீழே இறக்கி இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை ஆறவைத்துள்ள சாமை சாதத்தில் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதை பிடிகொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending