samai neer urundai
samai neer urundai

சாமை நீர் உருண்டை

தேவையான பொருட்கள்:
சாமை – ஒரு கப்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன்,
உளுந்து, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை (நறுக்கியது) – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
சாமையைக் களைந்து ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவிடவும். பிறகு வெந்த சாமையை ஆறவிடவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி, அடுப்பை அணைத்துவிடவும்.

பிறகு இதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதைச் சாமையுடன் சேர்த்து, தேவையான உப்பு போட்டு நன்கு கலந்துகொள்ளவும். பின்னர் கலவையைச் சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லிப் பானையில் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: வரகு, குதிரைவாலியிலும் இந்த உருண்டையைச் செய்யலாம்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending