madurai - 2026

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. அதன் பிறகு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால், கடந்த 20 நாட்களாக அனைத்தும் செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் படிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன. இதனிடையே மாணவர்களின் செமெஸ்டர் தேர்வுகளும் நடைபெறுமா.. நடைபெறாத என்ற குழப்பம் நிலவி வருகிறது.

இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதனால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அதற்கான இணைய தளங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending