அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட அமைப்பாளர் முருகுபாண்டியன் ஏற்பாட்டில் ஊரடங்கில் வேலையின்றி இருப்பவர்களுக்கு நடந்த பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட இணைசெயலாளர் சஞ்சீவி கலந்து கொண்டு 200 பேர்களுக்கு தலா ரூ.500 மதிப்பிலான பொருட்களை வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி வெற்றிவேல்,ரஜினிரவி,கலா, தினேஷ்,அறந்தாங்கி நகர செயலாளர் பொன்முத்துராமலிங்கம்,செல்வராஜ்,யுவராஜ்,திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் தங்கராஜ்,அழகுராஜமாணிக்கம்,ராசேந்திரன்,சிவக்குமார்,பழனியப்பன்,மெய்யநாதன்,ராமு,விஜயகுமார்,மதுசூதனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்பாளர் முருகுபாண்டியன் ஏற்பாட்டில் பொருட்கள் வழங்கப்பட்டது
