About Jayalalithaas death Investigation Ready to face - 2026
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டால், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தத் தவறும் இல்லை. அவருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது யாரும் தலையிடவில்லை. மருத்துவக் குழு அமைக்கப்பட்டதில் மட்டும் ஜெயலலிதா குடும்பத்தினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அவருக்கு மிகவும் வெளிப்படையாகவே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுதொடர்பான எல்லா மருத்துவ ஆவணங்களும் தயாராக உள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால், அதனை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என்று கூறினார்.

இதனிடையே ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் சிகிச்சையளித்த செவிலியர் க்ளோரியா, தனது இரு குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்னம்மோ நடக்குது மர்மமா இருக்குது!

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending