madhurai fire 3 - 2026

மதுரை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீயை, தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய போராடி அணைத்தனர்.

மதுரை அருகே விளாங்குடியில் தனியாருக்குச் சொந்தமான செல்வராஜ் டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் என்னும் நூற்பாலையில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர்.

madhurai fire 2 - 2026

இந்த நூற்பாலை அருகே அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பெட்ரோல் பங்க் போன்றவை உள்ளதால் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

madhurai fire 1 - 2026

இந்த நூற்பாலை கடந்த மூன்று மாத காலமாக மூடி கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இங்கு எப்படி தீப்பிடித்து என கூடல்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

madhurai fire - 2026

விரைந்து வந்து தீயை அணைத்த மதுரை தீயணைப்பு துறை மாவட்ட நிலைய அலுவலர் கல்யாணகுமார் மற்றும் மதுரை டவுன் நிலை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான மதுரை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது..

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending